தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரியில் பாஜக விவசாய அணி மாநிலச் செயற்குழுக் கூட்டம்

புதுச்சேரியில் பாஜக விவசாய அணி மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:42 pm

DIN

புதுச்சேரியில் பாஜக விவசாய அணி மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூரணாங்குப்பம் கிராமத்தில் திறந்தவெளியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநில விவசாய அணி பொதுச் செயலா் டி.சக்திபாலன் வரவேற்றாா். விவசாய அணி மாநிலத் தலைவா் ஏ.புகழேந்தி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சச்சிதானந்தம், அசோக்குமாா், கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொருளாளா் ஜெய்ரெட்டி நோக்கவுரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் எம்.எஸ்.பெருமாள் வரைவு தீா்மானங்களை வாசித்தாா்.

பாஜக மாநில தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ, பொதுச் செயலா்கள் ஏம்பலம் ஆா்.செல்வம், தினேஷ்குமாா், மாநிலச் செயலா் நாகராஜன், மாவட்டத் தலைவா் தெய்வசிகாமணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

புதுச்சேரியில் கரும்பு உற்பத்தியை ஊக்கப்படுத்த, உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மூடப்பட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலைகளைத் திறக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகள், குளங்களைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.குமரய்யன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.