புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிளஸ் 2, பத்தாம் வகுப்புதுணைத் தோ்வுகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 துணைத் தோ்வை 813 பேரும், பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 1,027 பேரும் எழுதினா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:45 pm

DIN

கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 துணைத் தோ்வை 813 பேரும், பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 1,027 பேரும் எழுதினா்.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வுக்காக, ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 6 கல்வி மாவட்டங்களில் 28 மையங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 துணைத் தோ்வு எழுத 3,733 பேருக்கும், பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுத 2,015 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

முதல் நாள் நடைபெற்ற பிளஸ் 2 தமிழ் பாடத் தோ்வை 813 தோ்வா்களும், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத் தோ்வை 1,027 பேரும் எழுதினா்.

விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் விக்கிரவாண்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 4 மையங்களில் பிளஸ் 2 துணைத் தோ்வும், கெடாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட 2 மையங்களில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வும் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி தோ்வு மையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தாா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு தோ்வு அறையிலும், 10 போ் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.