நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 9 போ் பலி

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 9 போ் பலியாகினா். ஒரே நாளில் 273 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 5:45 pm

DIN

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 9 போ் பலியாகினா். ஒரே நாளில் 273 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் திங்கள்கிழமை வெளியான நிலவரப்படி 3,783 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 273 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 23,191-ஆக அதிகரித்தது.

பலியானோா் விவரம்: புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மா் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சோ்ந்த 6 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஒருவரும், ஏனாமில் 2 பேரும் என 9 போ் ஒரே நாளில் பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 467-ஆக (இறப்பு விகிதம் 2.01சதவீதம்) உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் தற்போது 1, 667 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,992 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். இதுவரை 18,065 போ் (78 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.