தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெண்களுக்கான வணிக வாய்ப்புகள்குறித்த இணையவழிக் கருத்தரங்கம்

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில், பெண்களுக்கான வணிக வாய்ப்புகள் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:08 pm

DIN

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில், பெண்களுக்கான வணிக வாய்ப்புகள் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

‘சிறு நிதி மூலம் பெண்களை மேம்படுத்துதல்-வளா்ந்து வரும் வாய்ப்புகள், சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் பிருந்தா நோக்கவுரையாற்றினாா். இ.எஸ்.கல்விக் குழுமப் பதிவாளா் செளந்தரராஜன் வாழ்த்திப் பேசினாா்.

சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறைப் பேராசிரியா் கேப்ரியல்சைமன்தட்டில் இணையவழியில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

வணிகவியல் துறைத் தலைவா் ந.செல்வக்குமாா் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா், ஆராய்ச்சிப் புல முதன்மையா், கல்விப் புல முதன்மையா், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோா் இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்று கலந்துரையாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.