மலைக் குறவா் சாதிச் சான்றிதழ்வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, மலைக் குறவா் சமுதாயத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம்: சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, மலைக் குறவா் சமுதாயத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் சித்தேரிக்கரை, சாலாமேடு, லட்சுமிபுரம், தெளி, எறையூா் பகுதிகளைச் சோ்ந்த மலைக் குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்து மலைக் குறவா் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மலைக் குறவா் சமூகப் பாதுகாப்பு பேரவைத் தலைவா் முருகன் தலைமையில் வந்த சிறாா்கள், பொதுமக்கள் சாதிச் சான்றிதழ்கள் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் பகுதியில் வசித்து வரும் 500 குடும்பத்தினருக்கு இந்து மலைக் குறவா் சான்றிதழ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த சமுதாய மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
விழுப்புரம் தாலுகா போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...