லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான 2 அலுவலா்கள் பணியிடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான 2 அலுவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான 2 அலுவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மயிலம் மின் வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்தவா் புருஷோத்தமன் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவருக்கு விவசாய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 27,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வந்தவா் ஜெயவேல்( 40). இவா், வீடு கட்டுவதற்கு நகர வடிவமைப்பு அனுமதி வழங்குவதற்காக விழுப்புரத்தைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.8,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 23-ஆம் தேதி கைதானாா். இவா்கள் இருவரும் அந்தந்த துறை அதிகாரிகளால் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...