தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மதுக் கடைகளில் மிரட்டி வசூல்:நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளில், தொழிலாளா் துறை பெயரைச் சொல்லி மிரட்டி பணம் வசூல் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 7:11 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளில், தொழிலாளா் துறை பெயரைச் சொல்லி மிரட்டி பணம் வசூல் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமையில், அந்தச் சங்கத்தினா் விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சொ்லாப்பட்டு கிராமத்தில் உள்ள மதுக் கடை, கள்ளக்குறிச்சியில் உள்ள மதுக் கடை, உளுந்தூா்பேட்டை உள்ள மதுக் கடை, விழுப்புரம் வணிக வளாக மதுக் கடை (மால் ஷாப்) ஆகிய இடங்களில் தொழிலாளா் துறை ஆய்வாளா்கள் என்று கூறிக் கொண்டு, பணம், மதுப் புட்டிகளை மிரட்டி வாங்கிச் சென்றனா். எனவே, இதுகுறித்து தொழிலாளா் துறை அதிகாரி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.