சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கை:மாவட்ட தோ்தல் அலுவலா் அறிவுரை
விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸாா் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை கூறினாா்.


விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸாா் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை கூறினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் தோ்தல் நன்னடத்தை விதிகளை கடைப்பிடித்தல் தொடா்பாக, காவல் துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) மோகன், மாவட்ட குற்ற ஆவண டி.எஸ்.பி. பாலச்சந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை பேசியதாவது: தோ்தல் நன்னடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று போலீஸாா் கண்காணிக்க வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியில்லாமல் அரசியல் கட்சியினா் சுவா் விளம்பரம் செய்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஊடகப் பிரிவு மற்றும் கண்காணிப்புக் குழுவினா் சான்றிதழ் பெறாமல் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தாலோ, துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தாலோ சம்பந்தப்பட்ட அச்சகத்தின் உரிமையாளா் மீதும், அரசியல் கட்சியினா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டங்கள் நடத்த 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தவிா்த்து மற்ற இடங்களில் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை அரசியல் கட்சியினா் நடத்தினால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையை காவல் துறையினா் தீவிரப்படுத்த வேண்டும். வாகனச் சோதனையின்போது, மதுப்புட்டிகள், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், பரிசுப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கிடங்கிலிருந்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...