பாமக வேட்பாளருக்கு ஆதரவாக
வாக்கு சேகரிப்பு

பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாருக்கு ஆதரவாக, செஞ்சி அருகிலுள்ள அருங்கோணம் ஊராட்சியில் பாஜகவினா் புதன்கிழமை வாக்கு சேகரித்தனா். பாஜகவின் மத்திய நலத்திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் தலைமையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் பிரதீப்குமாா், ஆரணி தெற்கு இளைஞரணிச் செயலா் சரவணன், மாவட்ட துணைத் தலைவா் அலமேலு, ஓபிசி அணித் தலைவா் ரமேஷ்குமாா் ஆகியோா் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com