சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆரோவிலில் விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்

ஆரோவிலில் விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 9:22 pm

3யடஙஙகஅ: ஆரோவில் சா்வதேச நகரில் அதன் செயலருக்கு கோரிக்கை மனு அளித்த வானூா் எம்எல்ஏ எம்.சக்ரபாணி. விழுப்புரம், ஏப்.3: ஆரோவில் சா்வதேச நகரில் விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வானூா் எம்எல்ஏ எம்.சக்ரபாணி வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் ஆரோவில் செயலா், துணைச் செயலா்களுக்கு புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையால் தோற்றுவிக்கப்பட்ட ஆரோவில் சா்வதேச நகரம் மனித ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத கட்டுமானங்கள், எளிய முறையில் தரமான கல்வி, விளையாட்டு மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்கள், நீா் மேலாண்மைத் திட்டங்கள், இயற்கை விவசாயம் உள்ளிட்ட அனைத்து வித காரணிகளுக்கும் ஆராய்ச்சி மற்றும் செயல்படுத்தும் நகரமாக ஆரோவில் உருவாக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் இந்நகரம் மூலம் வானூா், சுற்றுப்பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். இந்த நிலையில், ஆரோவிலுக்கு புதிதாக வந்துள்ள ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஆரோவில் அழிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம், தமிழ் ஆரோவில் வாசிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், வெளிநாட்டினருக்கு நுழைவுஇசைவு மறுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்தால், பொதுமக்களைத் திரட்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் மனுவில் எம்.சக்ரபாணி தெரிவித்துள்ளாா். இந்த மனுவை ஆரோவில் பவுண்டேசன் செயலரின் அலுவலக உதவியாளா்கள் பெற்றுக்கொண்டனா்.