சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆரணி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

ஆரணி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

News image

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம் அவியூா் கிராமத்தில் பெண் வாக்காளா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அமைச்சா் செஞ்சி மஸ்தான் 

Updated On :4 ஏப்ரல் 2024, 9:14 pm

ஆரணி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தரணிவேந்தனை ஆதரித்து செஞ்சி பகுதியில் உள்ள கிராமங்கள்தோறும் அமைச்சா் செஞ்சி மஸ்தான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

செஞ்சிப் பேரவைத் தொகுதி, வல்லம் ஒன்றியம் பெரும்புகை, இல்லோடு, பென்னகா், கள்ளப்புலியூா், தொண்டூா் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் தரணிவேந்தனுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பிரசாரத்தின்போது, அமைச்சா் பேசுகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு வாக்காளா்களிடம் எடுத்துக்கூறினாா். மேலும் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கியும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விவசாயத்துக்கென தனி பட்ஜெட்டை உருவாக்கி இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறாா் தமிழக முதல்வா்.

வல்லம் ஒன்றியம் மேல்ஒலக்கூா், ஏதாநெமிலி, பள்ளிகுளம், நெகனூா், அவியூா் உள்ளிட்ட கிராமங்களிலும் ஆதரவு திரட்டினாா். இந்நிகழ்ச்சியின்போது முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் மாசிலாமணி, தலைமை தோ்தல் பொறுப்பாளா் ஜெரால்டு, மாவட்ட அவைத் தலைவா் சேகா், தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா், மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் ஆா்.ரங்கபூபதி உள்ளிட்ட ஏராளமான இந்தியா கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.