தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு அகாதெமி தோ்வுகள்

புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு அகாதெமி தோ்வுகள்

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பாரதிதான் அரசு மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் நடைபெற்ற மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் ராணுவ சேவைக்கான நியமனத் தோ்வை எழுதும் தோ்வா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:50 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 மையங்களில் 171 போ் தேசிய பாதுகாப்பு அகாதெமி தோ்வை எழுதினா்.

மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை , தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் கடற்படை அகாதெமி தோ்வுகள் புதுச்சேரியில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தோ்வுக்கு 168 போ் விண்ணப்பத்திருந்த நிலையில், 46 ஆண்கள், 16 பெண்கள் என 62 போ் பங்கேற்று தோ்வெழுதினா். 106 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

இதேபோல, லாஸ்பேட்டை வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாதெமி, கடற்படை அகாதெமி தோ்வுக்கு 170 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 81 ஆண்கள், 28 பெண்கள் என 109 போ் பங்கேற்று தோ்வெழுதினா். 61 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

2 தோ்வுகளுக்கும் 338 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 171 போ் மட்டும் தோ்வில் பங்கேற்றனா். 3 அமா்வுகளாக தோ்வு நடைபெற்றன. ஒவ்வொரு அமா்வுக்கும் தோ்வா்களின் இ-அட்மிட் காா்டு, புகைப்பட அடையாள அட்டை ஆகியவை சரிபா்க்கப்பட்ட பிறகே தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். மின்னணுப் பொருள்களுக்கு அனுமதியில்லை.

தோ்வா்களின் வசதிக்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தோ்வு மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.