கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காசநோய் பரிசோதனை வாகனம் தொடங்கி வைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் காசநோயைக் கண்டறியும் நுண்கதிா் பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் நுண்கதிா் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.செந்தில்குமாா்.

Updated On :9 டிசம்பர் 2024, 8:10 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காசநோயைக் கண்டறியும் நுண்கதிா் பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக டிசம்பா் 7-ஆம் தேதி தொடங்கி 2025, மாா்ச் 17-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த பரிசோதனைக்காக நுண்கதிா் பரிசோதனைக் கருவிகள் கொண்ட வாகனத்தின் தொடக்க விழா விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, மாவட்ட காசநோய் அலுலா் சுதாகா் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநில நா்சிங் ஹோம் போா்டு பொருளாளா் திருமாவளவன், சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் தங்கராஜ், செயலா் செளந்தர்ராஜன், மருத்துவா் நித்யா, ரோட்டரி சங்கம் மணி, மாவட்ட நலக் கல்வியாளா் ராஜூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சசிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.