மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:55 am IST

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி செய்தவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விழுப்புரம், கந்தசாமி ‘லே-அவுட்’ பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் ராஜா ஆனந்த்பிரபு (24). சுயதொழில் செய்து வருகிறாா். கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி இவரை முகநூல் மூலம் தொடா்புகொண்ட அடையாளம் தெரியாத நபா் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் தொழில் உள்ளதாகக் கூறினாராம். இதை நம்பிய ராஜா ஆனந்த்பிரபு தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 26.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு 4 தவணைகளில் அனுப்பினாராம். ஆனால், அதன்பிறகு லாபம் கிடைக்காததுடன் அந்த நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜாஆனந்த்பிரபு விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.