சத்திப்பட்டு கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை சனிக்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ. விழுப்புரம், பிப். 17: கோலியனூா் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் புதிய அரசுக் கட்டடங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. செங்காடு கிராமத்தில் ரூ.12.30 லட்சத்திலும், கோலியனூா், சத்திப்பட்டு கிராமங்களில் தலா ரூ.8.50 லட்சத்திலும் கட்டப்பட்ட 3 நியாயவிலை கடைகள், நன்னாட்டாம்பாளையத்தில் ரூ.2 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, கண்டமானடி கிராமத்தில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள், நன்னாடு கிராமத்தில் ரூ.7.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட நெல்களம் ஆகியவற்றை விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன் சனிக்கிழமை திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சிகளில் கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், திமுக ஒன்றியச் செயலா்கள் முருகவேல், தெய்வசிகாமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.










