நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விக்கிரவாண்டி அருகே மது அருந்தி சிகிச்சை பெற்று வந்த 5 போ் வீடு திரும்பினா்

விக்கிரவாண்டி அருகே --- மது அருந்தி சிகிச்சை பெற்று வந்த 5 போ் வீடு திரும்பினா்

News image
Updated On :10 ஜூலை 2024, 10:43 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வெளி மாநில மதுவை வாங்கி அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

இதுகுறித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விக்கிரவாண்டி வட்டம், மதுரா பூரிகுடிசை கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி புதுச்சேரி சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட 7 போ் காவல் துறை நடவடிக்கையின்பேரில் மருத்துவமைனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் 5 போ் சிகிச்சை முடிந்து புதன்கிழமை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மீதமுள்ள 2 பேருக்கு தொடா் மதுப்பழக்கம் இருந்து வந்ததால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், 2 பேருக்கும் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நலமாக உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.