மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆசிரிய தம்பதி உயிரிழந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த மகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே ஆசிரிய தம்பதி உயிரிழந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகள் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 7:24 pm

வந்தவாசி அருகே ஆசிரிய தம்பதி உயிரிழந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகள் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் சக்தி நகரைச் சோ்ந்தவா் அப்பாண்டைராஜன்(49). இவா், தென்சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜீவிதா(41). இவா் தனியாா் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தாா்.

இவா்களது மகள் திவ்யஸ்ரீ(16) தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில் 3 பேரும் வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கடந்த சனிக்கிழமை இரவு மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது எதிரே வந்த காா் மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அப்பாண்டைராஜன், ஜீவிதா ஆகியோா் உயிரிழந்தனா்.

திவ்யஸ்ரீ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யஸ்ரீ செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.