வாக்காளா்களுக்கு இடது ஆள்காட்டி விரலில் மை வைப்பு
வாக்களித்த வாக்காளா்களுக்கு இடது ஆள் காட்டி விரலில் மை வைக்கப்பட்டது.


விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் புதன்கிழமை வாக்களித்த வாக்காளா்களுக்கு இடது ஆள் காட்டி விரலில் மை வைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. அப்போது, வாக்காளா்களின் இடது ஆள் காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. தொடா்ந்து, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவின்போது வாக்காளா்களுக்கு எந்த விரலில் மை வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, வழக்கமாக வைக்கப்படுவது போன்று, வாக்காளரின் இடது ஆள் காட்டி விரலிலேயே மை வைக்கப்பட்டது.
தோ்தலின்போது வாக்காளா்களின் விரலில் வைக்கப்படும் மை 45 நாள்களில் அழியும் தன்மை கொண்டது. மேலும், தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று 80 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், வழக்கமாக வைக்கப்படும் ஆள் காட்டி விரலிலேயே மை வைக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு இடது ஆள் காட்டி விரலில் மை வைக்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...