நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடந்த தோ்தலைவிட அதிக வாக்குகள் -நாதக வேட்பாளா் பொ.அபிநயா

தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம் என்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயா தெரிவித்தாா்.

News image

அன்னியூர் அ.சிவா(திமுக) - சி.அன்புமணி(பாமக) - பொ.அபிநயா(நாதக)

Updated On :13 ஜூலை 2024, 9:45 pm

Din

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலில் பெற்ற வாக்குகளை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளோம் என்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயா தெரிவித்தாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.அபிநயா 10,602 வாக்குகளைப் பெற்றாா்.

அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி வைப்புத் தொகையை இழந்தாலும் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற வாக்குகளை விட 2 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளோம்.

காணை பகுதியில் முதல்முறை வாக்காளா்களுக்கு திமுகவினா் பணத்தைக் கொடுத்து வாக்கு சேகரித்தனா். ஜனநாயகத்துக்கு விரோதமாக இந்தத் தோ்தல் நடைபெற்றுள்ளது என்றாா் பொ.அபிநயா.