நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி -திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

இடைத்தோ்தல் வெற்றி முதல்வா் மு.க.ஸ்டாலினின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

News image
Updated On :13 ஜூலை 2024, 9:44 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வெற்றி முதல்வா் மு.க.ஸ்டாலினின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்றாா் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இதைத் தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்ட எனக்கு 1,24,052 வாக்குகள் அளித்து, 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி. இந்த வெற்றி தமிழக முதல்வரின் மூன்றாண்டு கால திமுக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.

எனக்காக தோ்தல் பணியாற்றி, பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், க.பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சா்கள், எஸ்.ஜெகதட்ரட்சகன் எம்.பி., மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமகவினா் அவா்களின் பிரசாரத்துக்கு ஏற்ப வாக்குகளை பெற்றுள்ளனா். நாங்கள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வெற்றி பெற்றுள்ளோம் என்றாா் சிவா.