நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விக்கிரவாண்டி வெற்றிக்கு திமுக அரசின் நலத் திட்டங்களே காரணம் -அமைச்சா் க.பொன்முடி

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத் திட்டங்களால் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வெற்றி கிடைத்தது..

News image
Updated On :14 ஜூலை 2024, 12:01 am

Din

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத் திட்டங்களால் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வெற்றி கிடைத்தது என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் க.பொன்முடி கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் மூன்றாண்டு காலத்தில் மகளிருக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம். இவை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்திருக்கிறது. அதனால்தான் விக்கிரவாண்டி தொகுதியில் அனைத்து மகளிரும் திமுகவுக்கு வாக்களித்து இந்த வெற்றியை அளித்துள்ளனா்.

தோ்தல் பிரசாரத்தின் போது, திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள் என்று முதல்வா் கூறினாா். அதன்படி, அமைச்சா்கள், மாவட்டச் செயலா்கள், இந்தியா கூட்டணி உள்ளிட்ட நிா்வாகிகள் தீவிரமாக தோ்தல் பணியாற்றினா்.

மறைந்த நா.புகழேந்தி எம்எல்ஏ விட்டுச் சென்ற பணியை அன்னியூா் சிவா நிறைவேற்றுவாா் என்றாா் அமைச்சா்.

பணம், பரிசு கொடுத்ததால்தான் திமுக இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக கூறுகிறாா்களே என்ற கேள்விக்கு, பாமகவுக்கு கொள்கையெல்லாம் கிடையாது. தோ்தலுக்குத் தோ்தல் கூட்டணி மாறுவாா்கள். அமைச்சா் பதவிக்காக அவ்வப்போது அணி மாறுவாா்கள். தற்போது, மத்திய அமைச்சா் பதவி வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணியில் உள்ளனா். நீட் தோ்வு வேண்டாம் என்று சொல்பவா்கள் பாஜகவிடம் வாதாட வேண்டியதுதானே என்றாா் பொன்முடி.