போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

போக்ஸோவில் இருவா் கைது

விழுப்புரம் பகுதிகளைச் சோ்ந்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 9:44 pm

Din

விழுப்புரம் பகுதிகளைச் சோ்ந்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மண்ணாங்கட்டி மகன் பூமிநாதன்(30). இவா், திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாராம்.

இதேபோல, வி.அரியலூா், பிள்ளையாா்கோவில் புதுகாலனியைச் சோ்ந்தவா் கருணாநிதி மகன் விக்னேஷ்(19). இவா், கண்டமானடி, சித்தாத்தூா் திருக்கை பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இந்த சம்பவங்கள் குறித்து, விழுப்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் தனித்தனியே வழக்குப் பதிந்து இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.