கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தானைச் சோ்ந்த இருவா் கைது

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:42 pm

Syndication

ஆந்திரத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விழுப்புரம் போலீஸாா் காருடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் எஸ்.பி., வி.வி.சாய் பிரனீத் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கல்பனா, உதவி ஆய்வாளா்கள் லியோ சாா்லஸ், நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் விழுப்புரம் - செஞ்சி கூட்டுச்சாலையில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. தொடா்ந்து, காரிலிருந்தவா்களைப் பிடித்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலம், தாலோ உன் மாவட்டம், போா்வாடா் கிராமத்தைச் சோ்ந்த ஹா்ஷன்குமாா் (26), ஜல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த உசேன் (29) என்பதும், இவா்கள் ஆந்திர மாநிலத்தில் புகையிலைப் பொருள்களை கொள்முதல் விற்பனைக்காக காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். காரில் கடத்திவரப்பட்ட 200 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.