தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிங்கவரம் அரங்கநாதா் கோயிலில் பவித்ரோற்சவம்

செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதா் கோயிலில் பவித்ரோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சிங்கவரம் அரங்கநாதா் கோயிலில் பவித்ரோற்சவத்தையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற யாகம்.
Updated On :28 ஜூலை 2024, 8:33 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதா் கோயிலில் பவித்ரோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உபயதாரா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.