தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காணை தெற்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

காணை தெற்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

News image
விழுப்புரம் மாவட்டம், காணை தெற்கு ஒன்றியம், வீரமூா் பகுதியில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து வியாழக்கிழமை பேசுகிறாா் அமைச்சா் க.பொன்முடி. உடன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ.
Updated On :27 ஜூன் 2024, 7:54 pm

Din

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, காணை தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வைலாமூா், குப்பம், காணை, காணை கடைவீதி, கருங்காலிப்பட்டு, வீரமூா் மற்றும் இந்த கிராமங்களிலுள்ள காலனி பகுதிகள், டி. புதுப்பாளையம், கெடாா், பள்ளியந்தூா், இதன் காலனிப் பகுதிகள், பொன்னங்குப்பம், காங்கேயனூா் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளா்அன்னியூா் அ. சிவாவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான க.பொன்முடி, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் வாக்குகளை சேகரித்தனா்.

பிரசார நிகழ்வுக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன். கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்.எல்.ஏ.இரா. லட்சுமணன், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலா் நே.சிற்றரசு, தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் சண்.ராமநாதன், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் தயா. இளந்திரையன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.