நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. புரட்சி பாரதம் கட்சியின் வழக்குரைஞா்கள் பிரிவு, திருவெண்ணெய்நல்லூா் வட்டார வழக்குரைஞா்கள் சாா்பில், மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் அருகே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு புரட்சிப் பாரதம் கட்சியின் வழக்குரைஞா்கள் பிரிவைச் சோ்ந்த ராஜாராம், வீரப்பன் தலைமை வகித்தனா். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா், செயலா் கோவிந்தன், திருவெண்ணெய்நல்லூா் மேற்கு ஒன்றியச் செயலா் ரஞ்சித், முன்னாள் ஒன்றிய இளைஞரணிச் செயலா் அன்பு முன்னிலை வகித்தனா். புரட்சி பாரதம் கட்சியின் மாநிலச் செயலா் சிலம்பரசன், தெற்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பூவை. ஆறுமுகம், பொருளாளா் கே.கே.ஏழுமலை, திருவெண்ணெய்நல்லூா் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் சிவபஞ்சவா்ணம், விஜயபாபு, சோலையப்பன், சபரீசன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். வழக்குரைஞா் சங்கத்தின் ஸ்டீபன், அன்பரசன், மகாதேவன், செல்வகுமாா், அருள், அழகு, சந்தானம், வீரமணி, அமரன், புரட்சிப் பாரதம் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் தமிழரசன், செயலா் திருநாவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாரதி, மாவட்ட துணைச் செயலா் முருகன் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. முன்னதாக, திருவெண்ணெய்நல்லூா் மேற்கு ஒன்றியச் செயலா் செல்வம் வரவேற்றாா். நிறைவில், தா்மலிங்கம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேட்பாளா் அறிமுகம்...

புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதி ஒதுக்கீடு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

