துலங்கம்பட்டு கோயில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், துலங்கம்பட்டு அருள்மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துலங்கம்பட்டு கிராமத்தில் பெரியாயி என்றழைக்கப்படும் அங்காள பரமேசுவரி அம்மன் கோயில் மாசித் தோ்த் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்மன் வீதியுலாவும், முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை வியாழக்கிழமையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்கள், நிலக்கடலை உள்ளிட்டவற்றையும், நாணயங்களையும் அம்மனுக்கு சூரைவிட்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com