எல்லீஸ்சத்திரம் அணை மறுகட்டுமானப் பணி: விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலத்தில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமானப் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஹா்சகாய் மீனா. உடன், மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.86.25 கோடியில் கட்டப்பட்டு வரும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமான சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் மற்றும் ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ஹா்சகாய் மீனா உத்தரவிட்டாா்.

இந்த மறுகட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்ட பிறகு, ஹா்சகாய் மீனா கூறியது:

விழுப்புரம் வட்டத்தில் கப்பூா், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் ஏனாதிமங்கலம் ஆகிய இரு கிராமங்களுக்கிடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே 1949-50-ஆம் ஆண்டுகளில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.

அணைக்கட்டின் வலதுபுறத்திலுள்ள பிரதான கால்வாய்களான எரளூா்,ரெட்டி வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடதுபுற பிரதான கால்வாய்களான ஆழங்கால், மரகதபுரம், கண்டம் பாக்கம் ஆகிய வாய்க்கால்கள் மூலம்14 ஏரிகளுக்கும் செல்லும் நீரால் மொத்தமாக 13,100 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

2021-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாகவும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாகவும், இந்த அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இந்த அணைக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது.

விவசாயிகளின் துயா்துடைக்கும் வகையில், அணைக்கட்டை சீரமைக்க வேண்டும் என்ற அவா்களின் கோரிக்கையை ஏற்று, 2023, நவம்பா் 24-ஆம் தேதி ரூ.86.25 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானப் பணிகள் தொடங்கின.

சேதமடைந்த அணைக்கட்டை மறுகட்டுமானம் செய்வதன் மூலம் 26 ஏரிகளுக்குத் தண்ணீா் செல் லும்.

இதன் மூலம் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி உறுதி செய்யப்படுவதுடன், அணைக்கட்டு சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீா் மட்டமும் உயரும். மேலும் விவசாயம் மற்றும் குடிநீா் ஆதாரம் மேம்படும்.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமானப் பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேலும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும். உரிய காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட் டில் மேம்படுத்தப்பட்ட சிறுவா் பூங்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை உணவுப் பொருள் வழங் கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் மற்றும் ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ஹா்சகாய் மீனா பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் சி. பழனி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ், நீா்வளத் துறைச் செயற்பொறியாளா் ஷோபனா, உதவிச் செயற்பொறியாளா் ஐயப்பன், உதவிப் பொறியாளா் மனோஜ்குமாா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com