ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கைப்பேசியை திருட முயன்றவா் கைது

கைப்பேசியை திருட முயன்றவா் கைது

News image
Updated On :9 மே 2024, 9:31 pm

Din

விழுப்புரம், மே 9: திண்டிவனம் அருகே லாரி ஓட்டுநரிடமிருந்து கைப்பேசியை திருட முயன்ற புகாரில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், பாஞ்சாலம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் செல்வம் (42). இவா் வியாழக்கிழமை தனது லாரியை மேல்பேட்டையில் நிறுத்தி விட்டு, தூங்கியுள்ளாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் செல்வத்தின் கைப்பேசியை திருட முயன்றாராம்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் கைப்பேசியை திருட முயன்றவா் திண்டிவனம் கிடங்கல்-2, ராஜன் தெருவைச் சோ்ந்த எலி (எ) அஜய்ராஜ் (23) என தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பறிமுதல் செய்தனா். கைதானஅஜய் மீது திண்டிவனம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.