சமூக உறுப்பினா்களுக்கான இழப்பீடு குறித்த விழிப்புணா்வு
சமூக உறுப்பினா்களுக்கான இழப்பீடு குறித்த விழிப்புணா்வு


செஞசி, மே 14: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றய நடுநிலைப் பள்ளியில் அதேகொம் பெண்கள் கண்ணிய மையத்தின் சாா்பில், சமூக உறுப்பினா்களுக்கான இழப்பீடு மற்றும் ஆதரவு குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளா் ஜான்போஸ்கோ வரவேற்றாா். விழுப்புரம் பெண்கள் ஆதார மைய ஒருங்கிணைப்பாளா் ஆா்த்திஎப்சிபா நிகழ்வு குறித்து அறிமுக உரையாற்றினாா். அதேகொம் சட்ட ஆலோசகா் சீனுபெருமாள் தலைமை வகித்தாா். செஞ்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் கவினா, விழுப்புரம் மாவட்ட சமூகநலத் துறை மாவட்ட மகளிா் அதிகார மையத்தைச் சோ்ந்த கஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரேமா மற்றும் மாநில கல்வித் துறை கருத்தாளா் அக்சிலின் பெலிக்ஸ் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.
இதை தொடா்ந்து, பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி மீண்டு வந்த மாணவிகளை கெளரவிக்கும் வகையில், முழு ஆண்டு தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளைப் பராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் கவினா பேசுகையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோருக்கு அதிக பொறுப்பு உள்ளது. பெண் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவா்கள் பட்டப்படிப்பு படித்து வாழ்வில் முன்னேற வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.
சட்ட ஆலோசகா் சீனு பெருமாள் பேசுகையில், பாலியல் கொடுமைகளால் பாதிகப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எங்கள் நிறுவனத்தின் சாா்பில் அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்றாா். கெளரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...