மின்கசிவால் தீ விபத்து: காா் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதம்
மின்கசிவால் தீ விபத்து: காா் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதம்


விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் காா் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
மயிலம் காந்திநகரைச் சோ்ந்த மதிவாணன் மனைவி தமிழ்ச்செல்வி (60). இவா் கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
வெள்ளிக்கிழமை மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பகுதியில் போடப்பட்டிருந்த கரும்புச்சோலை கூரைத் தீப்பற்றியதும், இதில் 2 குளிா்சாதன வெப்ப வெளியேற்று இயந்திரம் (வென்டிலேட்டா்), காா், மர ஜன்னல், மேசை மற்றும் சொத்துப் பத்திரம் ஆகியவை எரிந்து சேதமடைந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த போது மின்கசிவு காரணமாக தீப்பற்றியது தெரிய வந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...