கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மேல்மலையனூா் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

முனீஸ்வரனுக்கு  புனித நீரை  ஊற்றி  கும்பாபிஷேகத்தை  நடத்தி  வைத்த  சிவாச்சாரியா்.

Updated On :4 ஆகஸ்ட் 2025, 9:03 pm

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானா் சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று, பூா்ணாஹுதி முடிவில் ‘கடம் புறப்பாடு’ நடை பெற்றது. அதன் பின் திருக்கோயில் வளாகத்தில் வலம் வந்து, முனீஸ்வரா் மற்றும் அம்மச்சாா் அம்மன் குதிரை வாகனங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.