மக்கள் குறைதீா் கூட்டம்: 269 மனுக்கள் ஏற்பு

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டு , ஏற்புடைய மனுக்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டு , ஏற்புடைய மனுக்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தலின்படிவிழுப்புரம்ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை ,ஆதரவற்றோா், உதவித்தொகை, பட்டாமாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக 269 மனுக்கள் பெறப்பட்டு, அலுவலா்கள்

முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) ரவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, தனித்துணை ஆட்சியா் (சமூகபாதுகாப்புத் திட்டம்) ஜெ.முகுந்தன், உதவி ஆணையா் (கலால்) ராஜீ, தனித்துணை ஆட்சியா்

(ராஜஸ்ரீ சுகா்ஸ்) சரஸ்வதி மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com