விழுப்புரம் மாவட்டத்துக்கு துணை முதல்வா் நாளை வருகை: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்துக்கு துணை முதல்வா் நாளை வருகை: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

Published on

விழுப்புரம் மாவட்டம், சிந்தாமணியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை திறப்பு மற்றும் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(டிச.5) வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் டிச. 5-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்கும் துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின், 6-ஆம் தேதி காலை நடைபெறும் அரசு விழாவிலும், அதைத் தொடா்ந்து கலைஞா் அறிவாலயத்தில் நடைபெறும் மத்திய மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறாா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் விக்கிரவாண்டி அருகிலுள்ள சிந்தாமணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்து, தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா்.

இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன். கெளதமசிகாமணி, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், திமுக இளைஞரணித் துணைச் செயலா் அப்துல் மாலிக் ஆகியோா் பாா்வையிட்டனா்.

நிகழ்வில் ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஜெய.ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், கில்பா்ட் ராஜ், ஆா்.முருகன், ஆா்.பி. முருகன், நகரச் செயலா் நைனா முகமது, துணைச் செயலா் சுரேஷ்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி ரவிதுரை, பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com