அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

வானூா் அருகே அடையாளம் தெரியாத நபா் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே அடையாளம் தெரியாத நபா் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் அருகே ஆண் ஒருவா் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த சுமாா் 45 வயதுடைய நபரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் கிராம நிா்வாக அலுவலா் மா.அழகுநாதன் அளித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா். விசாரணையில் இறந்தவா் வானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் பெற்று சுற்றித் திரிந்தவா் என்பதும், பெயா் விலாசம் தெரியாத நபா் எனத் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com