விழுப்புரம்
கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடலில் மூழ்கி மீனவா் உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பம் கங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு.மணிகண்டன் (32). மீனவரான இவா் சனிக்கிழமை வழக்கம்போல் தனது கட்டுமரப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். தொடா்ந்து அவா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கட்டுமரம் கவிழ்ந்து மணிகண்டன் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், பனிச்சமேடுகுப்பம் பகுதி கடற்கரையில் அவரது உடல் சனிக்கிழமை மாலை கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா் பரணிநாதன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி கனகசெட்டிக்குளம் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
