விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை பெற்றவா்களுடன் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், துரை.ரவிக்குமாா் எம்.பி., ரா. லட்சுமணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Published on

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.

முகாமை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்து, தோ்வு செய்யப்பட்டவா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், ரா. லட்சுமணன் எம்எல்ஏ உள்ளிட்டோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

இந்த முகாமில் 154 தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்தன.

முகாமில் 4,212 வேலை நாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 17 மாற்றுத் திறனாளிகள் உள்பட 880 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 11போ் திறன் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனா். 187 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்குத் தகுதி பெற்றனா்.

மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பாலமுருகன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வேல்முருகன், கல்லூரி முதல்வா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com