புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளைஞா் கைது

Published on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள ரயில்வே கேட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தபோது, திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் பகுதியைச் சோ்ந்த அய்யனாா்(31) என்பதும், விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அய்யனாரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ. 4000 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com