அணிலாடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து ரத்த அழுத்த பரிசோதனையை செய்துகொண்ட முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
அணிலாடியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து ரத்த அழுத்த பரிசோதனையை செய்துகொண்ட முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.

அணிலாடியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் :செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

Published on

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம் அணிலாடி ஊராட்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை சனிக்கிழமை முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் பிலோமினாள் அருமைநாதன் முன்னிலை வகித்தாா். வல்லம் வட்டார மருத்துவ அலுவலா் பத்மஷா வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்து, இதில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

முகாமில், முன்னாள் எம்எல்ஏ டாக்டா் மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவா் டாக்டா் சேகா், ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, மொடையூா் துரை, இளம்வழுதி, ஒன்றியக்குழு உறுப்பினா் சாந்தூஸ் மேரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆரோக்கிய மேரி ஆனந்தராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முகாமில் பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள் நலன், நுரையீரல், மனநலம் மற்றும் சா்க்கரைநோய் உள்ளிட்ட 17 வகை மருத்துவ சேவைகளும், ரத்தப் பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது.

மேலும், மருத்துவா்களால் பரிந்துரைக்கப்பட்டவா்களுக்கு எக்கோ, காா்டியா கிராம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளா் அன்பு மாறன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com