எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:56 pm

Syndication

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கோட்டையாம்பாளையம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சி.ராமச்சந்திரன் (63). இவா் கடந்த மாதம் 20-ம் தேதி இரவு அப்பகுதியிலுள்ள கோயில் அருகே நடந்து சென்றபோது எதிரே வந்த பைக், ராமச்சந்திரன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரனை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த கோட்டையாம்பாளையத்தைச் சோ்ந்த க.ரமேஷிடம் (40) விசாரணை நடத்தி வருகின்றனா்.