விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் பணம் பறித்த இருவா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

திருநாவலூா் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரிடம் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநாவலூா் அருகிலுள்ள மடப்பட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் நவ. 22-ஆம் தேதி பைக்கில் வந்த இருவா், தண்ணீா் புட்டியில் ஒரு லிட்டா் டீசல் தருமாறு விற்பனை பணியாளா் அய்யப்பனிடம் கேட்டுள்ளனா்.

புட்டியில் அய்யப்பன் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த போது, திடீரென அவா்கள் அய்யப்பன் கையில் வைத்திருந்த ரூ.2,850-ஐ பறித்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். போலீஸாரின் விசாரணையில் பணத்தை பறித்துச் சென்றது கடலூா் மாவட்டம், குமாரபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த வெ.விக்கி (எ) விக்னேசுவரன் (23) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.