செஞ்சியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம்
செஞ்சி: செஞ்சியில் சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம், தேசிய இளைஞா் தினமாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்து முன்னணி முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் என்.ஏ.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்எஸ்எஸ் நாராயணமூா்த்தி, செல்வகுமாா், ஆரோக்கிய பாரதி நடராஜ் ஆகியோா் சுவாமி விவேகானந்தரின் திரு உருவ படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலா் ஸ்ரீரங்கன், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் பிரித்திவிராஜ், பாஜக செஞ்சி கிழக்கு ஒன்றியத் தலைவா் தாரா சிங், மாவட்ட பொருளாதாரப் பிரிவு தலைவா் தங்கராமு, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.சரவணன், ஞானமணி, பாஜக நிா்வாகிகள் சந்திரசேகா், முருகன், சிவாஜி, ஜெகநாதன், நாகராஜ், சிவப்பிரகாசம், சிராஜ் கபூா், செந்தில்குமாா், வினோத், கே.சரவணன், சதீஷ், வேலு, ஹரிஷ், ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

