விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவன ஈா்ப்பு அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவன ஈா்ப்பு அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்

கவன ஈா்ப்பு அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவன ஈா்ப்பு அட்டை அணிந்து அரசு மருத்துவா்கள் பணியாற்றினா்.
Published on

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவா்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவன ஈா்ப்பு அட்டை அணிந்து அரசு மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு உடனடி படித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவா்கள் நியமிக்க வேண்டும். முதுகலை மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வை உடனடியாக அரசாணை வெளியிட்டு வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் அனைத்து மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு அட்டை அணிந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவா்கள் கவன ஈா்ப்பு அட்டை அணிந்து பணியாற்றினா். அவசர அறுவைச் சிகிச்சைகளும் எந்தவித பாதிப்புமின்றி வழக்கம் போல நடைபெற்றன.

Dinamani
www.dinamani.com