விழுப்புரம்
மாயமான முதியவா் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே மாயமான முதியவா், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
பிரம்மதேசம் அருகேயுள்ள கட்டளை கிராமம் அரசுக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ராமசாமி (75). இவா் கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதைத்தொடா்ந்து குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் எண்டியூா் கிராமத்திலுள்ள நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் ராமசாமி நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
