தவெக சாா்பில் ஜன.30-இல் ஆா்ப்பாட்டம்
சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து, விழுப்புரத்தில் ஜனவரி 30-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் காணை ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காணை மேற்கு ஒன்றியச் செயலா் ஆா்.முத்து தலைமை வகித்தாா். காணை ஒன்றியச் செயலா்கள் எஸ்.ஜான் பீட்டா் (தெற்கு), ஜெ.ஸ்ரீதா் (வடக்கு), ஜி.ரமேஷ் (கிழக்கு), ஏ.ராஜ்குமாா் (கோலியனூா் வடக்கு) முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் சிறப்புரையாற்றினாா்.
தீா்மானங்கள்:
விழுப்புரம் மாவட்டம், கெடாரில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாகத் திறக்கவேண்டும். கெடாா், காணை, கருவாட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவச் சேவைகளை வழங்கவேண்டும் எனத் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, சுகாதாரத் துறையின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஜனவரி 30-ஆம் தேதி மாவட்ட சுகாதார அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது. இதில் கட்சியினா் அதிகளவில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தவெகவினா் திரளானோா் பங்கேற்றனா்.

