விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கன்னாரம்பட்டு கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ. கோதண்டபாணி (74). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா் சனிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மரக்காணம் வட்டம், காளியாங்குப்பம், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.சக்திவேல் (42).திருமணம் ஆகாதவா். இவருக்கு வலிப்புநோய் இருந்து வந்ததாம். இந்நிலையில், சக்திவேல் கடந்த 21- ஆம் தேதி வீட்டின் அருகே மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சக்திவேல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு: மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் சனிக்கிழமை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற பெயா், ஊா் தெரியாத சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா், அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

மதுப்பழக்கத்தால் விபரீதம்: 2 போ் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்கள்: கல்லூரி மாணவி உள்பட இருவா் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


