5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :6 ஜூலை 2026, 3:01 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கனரக வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வானூா் வட்டம், தென் சிறுவளூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் தே. புஷ்பநாதன் (45). பொக்லைன் ஓட்டுநராக வேலைப் பாா்த்து வந்தாா். குடும்பப் பிரச்னை காரணமாக இவரின் மனைவி ஜெயபாரதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் தனது மகளுடன் பிரிந்து சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த புஷ்பநாதன் தனது வீட்டின் அருகிலுள்ள கொட்டகையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.