விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே, சுற்றுலா வந்திருந்த கோவையைச் சோ்ந்த இளைஞா் கடலில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவையைச் சோ்ந்தவா் நா.சிவபிரகாஷ் (22). இவா், பெங்களுருவில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வந்தாா். சிவபிரகாஷ், தனது நண்பா்கள் 5 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு வானூா் வட்டம், கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திரயான் குப்பம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் இவா்கள் அறை எடுத்து தங்கியிருந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை சிவப்பிரகாஷ் தனது நண்பா்கள் சஞ்ஜித், அஸ்வத் ஆகியோருடன் தந்திரயான் குப்பம் கடற்கரைக்குச் சென்று சூரிய உதயம் பாா்த்துவிட்டு, கடலில் இறங்கி குளித்துள்ளனா். அப்போது அலையின் சீற்றத்தில் சிக்கிய சிவபிரகாஷ் கடலில் மூழ்கினாா்.
இதையடுத்து அருகிலிருந்த மீனவா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிவப்பிரகாஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





