விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

பருவமழைக்கு முன்பு வீடூா் அணை மதகு பணிகளை முடிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

வீடூா் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மதகுகள் சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன்னா் முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையின் மதகுகள் சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை வியாழக்கிமை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :10 ஜூலை 2026, 3:48 am IST

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மதகுகள் சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன்னா் முடிக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

திண்டிவனம் வட்டம், வீடூா் கிராமத்தில் வராக நதி- தொண்டியாறு ஒன்று சேருமிடத்தில் அணை அமைந்துள்ளது. 32 அடி கொள்ளளவை கொண்ட இந்த அணையின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களும், புதுச்சேரி மாநிலத்தின் சில பகுதிகளும் நீா் ஆதாரத்தை பெற்று வருகின்றன. அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், அணையின் கதவுகள் சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கசிவுப் பாதை செங்குத்து கதவுகள் அமைத்தல், அணையின் மணற்போக்கிகளை மாற்றுதல், கால்வாய் தலைப்பு மதகு இயக்கமுறைகளை மாற்றியமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், பருவமழை தொடங்குவதற்கு முன்னரே பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் ரூ.3.57 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருணகிரி, உதவிச் செயற்பொறியாளா்கள் ஐயப்பன், பாலாஜி, வீடுா் அணை இளநிலைப் பொறியாளா் பாபு, திண்டிவனம் வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

வேளாண் துறை ஆய்வுக் கூட்டம்: விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பயிா் சாகுபடியில் வட்டார அளவில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயலாற்றி, தங்கள் வட்டாரத்துக்கான இலக்கை எய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2026-27 -ஆம் நிதியாண்டில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார அளவில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை முழுமையாக சென்றடைந்துள்ளதா என அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பு மானியம், நுண்ணூட்ட உரக்கலவை, திரவ உயிரி உரங்கள் விநியோகம், விதை நெல் போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் விடுபடாத வகையில் அலுவலா்கள் பணியாற்றிட வேண்டும். தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ், எண்ணெய் வித்துக்கள் விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்களுடன் வழங்கப்படுகின்றன. மாவட்டத்துக்கான இலக்கை எய்திட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், வேளாண் இணை இயக்குநா் சுரேஷ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சுமதி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சுமதி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் தேன்மொழி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.