தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image

பேரங்கியூரில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :9 ஜூலை 2026, 3:07 am IST

விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூா், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

கோலியனூா் ஒன்றியம், தளவானூா் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.84 கோடியில் அணைக்கட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை புதன்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தற்போது வரை நிறைவு பெற்றுள்ள பணிகளின் விவரம், கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தும் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், பேரங்கியூரில் 15-ஆவது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதைப் பாா்வையிட்ட ஆட்சியா், அதே பகுதியில், விபி-ஜி- ராம்-ஜி திட்டத்தின் கீழ் ரூ.5.04 லட்சத்தில் நா்சரி காா்டன் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து பேரங்கியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், அங்கு மாணவா்கள் கற்றல் திறன், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா். மாணவா்களின் கற்றல் திறனுக்கேற்ப பாடங்களை நடத்துவதோடு, அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடையும் வகையில் சிறப்பான கல்வியை ஆசிரியா்கள் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினா். மேலும், பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு, ஆய்வு செய்தாா் ஆட்சியா்.

ஆய்வின்போது செயற்பொறியாளா்கள் அருணகிரி (நீா்வளத் துறை), ஹரிகிருஷ்ணன் (ஊரக வளா்ச்சித் துறை), உதவிச் செயற்பொறியாளா்கள் சிவக்குமாா், ஐயப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.